×

டெஸ்ட் கருவிக்கே டெஸ்ட் வைத்த நாடு..ஆடு, பப்பாளி பழத்திற்கு கொரோனா உறுதி என வந்த முடிவால் மக்கள் அதிர்ச்சி

தான்சானியா : தான்சானியாவில் ஆய்வகத்தில் ஆடு, பப்பாளி பழம் ஆகியவற்றிற்கு கொரோனா இருப்பதாக முடிவு வந்ததைத் தொடர்ந்து கொரோனா நோயைக் கண்டறியும் பரிசோதனைக் கருவியின் பயன்பாட்டை அந்நாட்டு அதிபர் ஜான் மகுபலி முற்றிலும் தடை செய்துள்ளார். கிழக்கு ஆபிரிக்காவின் தான்சானியாவில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்களுக்கு ஏற்படும் தொற்றை பரிசோதிக்க சோதனை கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளை முழுவதுமாக நம்பாத தான்சானியா அதிபர், கொரோனா பரிசோதனைக் கருவிகளின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன் காரணமாக, ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்பவர்களுக்கு தெரியாமல்,  அதிகாரிகள் பப்பாளி மற்றும் ஆடு போன்றவற்றின் மாதிரிகளை, மனிதர்களின் பெயர் மற்றும் வயதை இணைத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பரிசோதனையின் முடிவில் பப்பாளிக்கும், ஆட்டிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த தான்சானியா அதிபர் மகுபலி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைக் கருவிகள் தொழில்நுட்ப கோளாறு கொண்டவை என அறிவித்தார்.அது மட்டுமல்லாமல் கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு தடை விதித்ததோடு, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

Tags : country ,Corona , Test, instrument, country, goat, papaya, fruit, corona, sure, people, shock
× RELATED சொல்லிட்டாங்க…