இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெண் : மூட்டை தூக்கியபடி காடு, மேடுகளில் ஏறி மக்களுக்கு உதவும் நக்சலாக இருந்து எம்.எல்.ஏ-வாக மாறிய சீதாக்கா!!

ஹைதராபாத்: காடு மேடுகளின் ரகசிய வழிகளையும், ஒற்றையடிப்பாதைகளையும் தெலங்கானா முலுக் பகுதியில் வேறு யாரையும் விடவும் தெளிவாக அறிந்தவர் சீதாக்கா. மாவோயிஸ்ட்டாக இருந்து எல்.எல்.ஏ-வாக மாறிய சீதாக்கா, ஊரில் இருக்கும் அனைவருக்கும் நெருக்கம். உள்ளூர் தொடர்புகளை வைத்தே இப்போது தனது தொகுதியின் பழங்குடிகளுக்கு உணவுப் பற்றாக்குறையில்லாமல் கொரோனாவை வெல்ல வைத்துக்கொண்டிருக்கிறார் சீதாக்கா.

இதே வனப்பாதைகளின் வழியாக இரவு நேரத்தில் உணவுக்காக கைகளில் துப்பாக்கியுடன் பயணித்த சீதாக்கா, இப்போது முலுக் பகுதியின் எம்.எல்.ஏ-வாக பயணிக்கிறார். ஒரே வித்தியாசம் அன்று கைகளில் இருந்தது துப்பாக்கி, இப்போது தானியங்களும், காய்கறிகளும்.இரண்டு முறை இதே பகுதியில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்சரி அனஸ்யா, முலுக் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு அவர் சீதாக்கா. அரசியலுக்கு வருவதற்கு முன்பு, 15 வருடங்களாக மாவோயிஸ்ட்டாக இருந்தவர், 2009-இலும், 2018-இல் மீண்டும் எல்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

உள்ளூர் தொடர்புகளையும், ஊராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்து தானியங்களையும், காய்கறிகளையும் பெறும் அவர், சாலையிலிருந்து முழுவதுமாக வெட்டி விடப்பட்ட 150 கிராமங்களுக்கும், குடிசைப்பகுதிகளுக்கும் அவற்றை கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதுடன், அம்மக்களை தினமும் போய் சந்திக்கிறார். பிரசவம் உள்ளிட்ட பல மருத்துவ அவசரங்களுக்கும் சேர்த்து எல்லா நேரத்திலும் தயாராக இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, டிராக்டர், மாட்டு வண்டி என எது கிடைத்தாலும் அதில் ஏறி கொண்டு மலைவாழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதை தினசரி கேட்டறிகிறார்.  சில சமயங்களில், இது கடினமான மலைப்பகுதி என்பதால் இந்த உணவு பொருட்களை கொண்டு செல்ல ஆட்களும் கிடைப்பதில்லை..ஆனால் யாரையும் எதிர்பார்த்து சீதாக்கா காத்திருப்பதில்லை,தலையில் ஒரு துணியை சுற்றி சும்மாடு வைத்து, அதன்மேல் மூட்டைகளையும் வைத்து கொண்டு பழங்குடி கிராமத்தை நோக்கி நடைபோடுகிறார். அரிசி, பருப்பு, காய்கறி முதல் மாஸ்க் வரை அனைத்தும் இந்த பழங்குடி, பட்டியலின கிராம மக்களுக்கு கிடைத்து வருகிறது.. கடந்த 40 நாட்களாக இங்குதான் இவர் இருக்கிறார்!! இப்படி மூட்டையை சுமந்து செல்லும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது..

Related Stories:

>