×

சென்னையின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் போலீசார் வாகன சோதனை: தீவிர பரிசோதனைக்கு பிறகே வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: சென்னையின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் போலீசார் வாகன சோதனையை தீவிரபடுத்துயுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 226 ஆக உள்ளது. 1210 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரானா நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய 3 வது இரண்டு வார ஊரடங்கினை நீட்டித்தது. பொதுப் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா பீதி காரணமாக சென்னையில் வசித்து வரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வடமாநிலத்தவர்களும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி பல்வேறு வகையினில் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தில் அதிக நோய்தொற்று காணப்படும் சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேரும் பட்சத்தில் நோய்தொற்றானது மேலும் பல பகுதிகளிலும் பரவ வாய்ப்புள்ளதால் பீர்கன்காரனை ,தாம்பரம் ரயில்வே ,மற்றும் ஊர்காவல்படையை சேர்ந்த போலீசார் சென்னையின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களையும் பிற பகுதிகளில் இருந்து சென்னையினை நோக்கி வரக்கூடிய வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

மேலும் அரசின் விதிமுறைகளின் படி இருசக்கர வாகனத்தில் ஒருவரும் நான்கு சக்கர வாகனத்தில் இருவரும் என பின்பற்றாமலும் அவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரியும் வாகனங்கள் மீதும் அதிகாரிகள் ஊரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : Police Vehicle Inspection ,Perungaluthur ,Chennai Gateway Police Vehicle Inspection ,Chennai Gateway , Chennai, Perungalthur, Police, Vehicle Inspection
× RELATED போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து மீன்...