×

தமிழகத்தில் 231 பேருக்கு கொரோனா சென்னையில் மேலும் 174 பேர் தொற்று உறுதி:இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 2,757,

* குணமானவர்கள் 1,341, இறப்பு 29 உயர்வு

சென்னை: தமிழகத்தில் 231 பேருக்கும், சென்னையில் மேலும் 174 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,341 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலருக்கு தொற்று பரவியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் சென்னைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில்  கொரோனா வேகமாக பரவி வருவதால் அதை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் பேரிடர் ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று முன்தினம் 203 பேருக்கும் அதில் சென்னையில் 176 பேருக்கும் பரவியது. இதையடுத்து தமிழகத்தில் 2,526 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று தமிழகம் முழுவதும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்: தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 490 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் நேற்று மட்டும் 10,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அரியலூர் 18, செங்கல்பட்டு 5, சென்னை 174, கோவை 1, கடலூர் 2, காஞ்சிபுரம் 13, மதுரை 1, பெரம்பலூர் 2, ராமநாதபுரம் 2, சேலம் மற்றும் தேனி 1, திருப்பூர் 2, திருவள்ளூர் 7, விழுப்புரம் 2 என தமிழகம் முழுவதும் 231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 29 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்படி இதுவரை 1,340 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,384 ஆக உள்ளது.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 35,418 பேர் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சோதனை செய்து 1 லட்சத்து 35 ஆயிரத்து 698 மாதிரிகளுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இன்னும் 1,035 மாதிரிகளின் சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. இதுவரை 1,828 ஆண்களும், 928 பெண்களும், ஒரு திருநங்கையும் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொற்று எப்படி?
யாரிடமும் தொடர்பு இல்லாமல் பலருக்கும் ெகாரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிவப்பு மண்டலத்தில் 12 மாவட்டங்களும், ஆரஞ்சு மண்டலத்தில் 24 மாவட்டங்களும், பச்சை மண்டலத்தில் 1 மாவட்டமான கிருஷ்ணகிரி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்குள் 159 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா அதிகமாக பரவிவரும் சென்னையில் நேற்று முன்தினம் 1,083 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,257ஆக உயர்ந்துள்ளது.



Tags : Tamil Nadu ,Coronation raids , Tamil, Corona, Chennai, Curfew
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...