×

கொரோனா சமயத்தில் வலிமை படத்துக்கு விளம்பரம் வேண்டாம்: அஜித் உத்தரவு

கொரோனா தாக்கம் அதிகரி த்து வரும் நிலையில் தான் நடிக்கும் வலிமை படத்துக்கு எந்தவித விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று நடிகர் அஜித், தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  இன்று அஜித்துக்கு பிறந்த நாள். இதனால் அவர் நடிக்கும் வலிமை படத்தை இன்று பிரமாண்டமாக விளம்பரப்படுத்த பட தயாரிப்பாளர் போனி கபூர் விரும்பினார். ஆனால் கொரோனா நோயால் பதற்றமான சூழல் இருப்பதால் இந்த நேரத்தில் வலிமை படத்தை புரமோட் செய்ய வேண்டாம் என்று அஜித் சொல்லிவிட்டாராம். இதையடுத்து போனி கபூர் தயாரிக்கும் மற்ற படங்களின் ஹீரோக்களும் இதே கருத்தை தங்கள் பட புரமோஷன் பற்றியும் கூறியுள்ளனராம்.

இது பற்றி போனி கபூர் கூறும்போது, ‘கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போரடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனியாக இருப்போம், நம் நலம் காப்போம்’ என்று கூறியுள்ளார்.

Tags : Corona ,Ajit , Corona, strength, don't advertise, Ajith
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...