×

ஜனவரி - மார்ச் காலாண்டில் தங்கத்தின் தேவை 36% சரிந்தது: உலக தங்க கவுன்சில் தகவல்

சென்னை: ஊரடங்கு மற்றும் பொருளாதார மந்த நிலையால் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில், இந்தியாவில் தங்கத்தின் தேவை 101.9 சதவீதம் சரிந்துள்ளது.   ஆபரண தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் அதீத ஆர்வம் கொண்டவர்கள். ஆனால், பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதால், பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு அதிகரித்து, தங்கம் விலை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி ஆபரண தங்கம் கிராம் 3,735 ஆகவும், சவரன் 29,880 ஆகவும் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து, கடந்த மார்ச் இறுதியில் கிராம் 3,952ஆகவும் சவரன் 31,616 ஆகவும் ஆனது. தற்போது ஊரடங்கால் ஆபரண தங்கம் விலை மாற்றத்தை நகை விற்பனையாளர் சங்கத்தினர் மாற்றுவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இருப்பினும், அட்சய திருதியை முன்னிட்டு நகை வியாபாரிகள் ஆன்லைனில் நகை விற்பனையை அறிவித்தனர். அப்போது ஆபரண தங்கம் சவரன் ₹36,000ஐ தாண்டியது. இந்நிலையில்,  கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் தங்கம் விற்பனை தொடர்நாக உலக தங்க கவுன்சிலின் இந்தியாவுக்கான இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:  ஆபரண தங்கம் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடுகள் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இத்துறைக்கு மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கும். ஜனவரி - மார்ச் காலாண்டில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. தங்கம் விற்பனை மற்றும் முதலீடு 37,580 கோடியாக உளளது. இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இது 47,000 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் தேவை 20 சதவீதம் சரிந்துள்ளது.

 அதோடு, மேற்கண்ட காலாண்டில் தங்கத்தின் விலை, வரிகள் சேர்க்காமல் சராசரியாக 25 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார மந்த நிலையே இதற்கு முக்கிய காரணம்.  மேற்கண்ட காலாண்டில் எடை அடிப்படையில் தங்கத்தின் தேவை 41 சதவீதம் சரிந்து 73.9 டன்களாக உள்ளது. முந்தைய காலாண்டில் இது 125.4 டன்களாக இருந்தது. தங்கத்தி–்ன் மீதான முதலீடுகள் மட்டும் 17 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், பழைய தங்கத்தை விற்பது மற்றும் பழைய தங்கத்துக்கு பதிலாக புதிய தங்கம் வாங்குவது 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் 18.5 டன் தங்கம் சந்தைக்கு வந்துள்ளது. தங்கம் விலை உயர்வு காரணமாக, அடுத்து வரும் காலாண்டுகளில் தங்க நகை அடமானம் மற்றும் பழைய நகை விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்றார்.



Tags : World Gold Council , January, March Quarterly, Gold, World Gold
× RELATED இந்தியாவில் உள்ள குடும்பங்களிடம் நகை...