×

இந்தியாவில் உள்ள குடும்பங்களிடம் நகை வடிவில் மொத்தம் 25,000 டன் தங்கம் உள்ளதாக கோல்டுமேன் சாக்ஸ் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள குடும்பங்களிடம் நகை வடிவில் மொத்தம் 25,000 டன் தங்கம் உள்ளதாக கோல்டுமேன் சாக்ஸ் அறிவித்துள்ளது. உலகில் மொத்த தங்கத்தில் 10-லிருந்து 11% தங்கம், நகை மற்றும் நாணய வடிவில் இந்தியாவில் உள்ளது என்று உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 2020 ஜனவரியில் சராசரியாக ரூ.39,900ஆக இருந்த 10 கிராம் 24 காரட் தங்கம் விலை 2023 டிசம்பரில் ரூ.62,200ஆக உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்ததால் இந்திய குடும்பங்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு 2023-ல் ரூ.149.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

The post இந்தியாவில் உள்ள குடும்பங்களிடம் நகை வடிவில் மொத்தம் 25,000 டன் தங்கம் உள்ளதாக கோல்டுமேன் சாக்ஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Goldman Sachs ,India ,World Gold Council ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!