×

நீங்க ‘விடா’க்கண்டன்னா... நாங்க ‘எஸ்கேப்’ எம்டன்...சைரன் வச்ச ஆம்புலன்சில் மணமக்கள், திருமண கோஷ்டி: பாய்ந்து வந்து பிடித்தது போலீஸ்

காசியாபாத்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோயாளி போல நடித்து ஆம்புலன்சில் வந்த மாப்பிள்ளை, பெண், உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் எடுத்து செல்வதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  அவ்வப்போது கொரோனா ஊரடங்கிலும் சில சுவாரசியமான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே திட்டமிட்ட சில திருமணங்களை தள்ளிவைக்க முடியாமல் மிகவும் நெருக்கடியான நிலையில் நடத்தப்படுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் ஐடி கம்பெனியில் பணிபுரியும் பெண்ணுக்கும் கேரள மாநிலம் கோட்டயத்தில் இருக்கும் வங்கி ஊழியரான மாப்பிள்ளைக்கும் வீடியோ கான்பரன்சில் திருமணம் நடந்தது. செல்போனுக்கு மாப்பிள்ளை தாலி கட்டிய அதிசய கல்யாணம் நடந்தது.இந்நிலையில் திருமணம் முடித்த மாப்பிள்ளையும், பெண்ணும் நோயாளிபோல நடித்து ஆம்புலன்சில் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் நேற்று இளம்ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை, பெண் மற்றும் குடும்பத்தினர் சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ள முசாபர்நகர் திரும்ப வேண்டும். ஊரடங்கு காரணமாக எந்த வாகனத்திலும் செல்ல முடியாத நிலையில் திருமண கோஷ்டி ஆம்புலன்சை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

புதுமாப்பிள்ளை, பெண் உட்பட 9 பேர் ஆம்புலன்சில் சொந்த ஊரான கட்டாலி திரும்பியுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக போலீசார் ஆம்புலன்சை சோதனை செய்தபோது குட்டு அம்பலமானது. இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும்a புதுமண தம்பதி உட்பட 9 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Vita ,Kandanna ,Ambulances ,Bride ,Siren Vasu ,Groom ,wedding , Corona virus, ambulance, bride, marriage
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...