×

100 நாள் வேலைத் திட்டத்தில் கலெக்டர் ஒப்புதல் பெற வேண்டும் 55 வயதுக்கு மேல் பணி வழங்க கூடாது

* தொழிலாளர்களை கூட்டமாக அழைத்து செல்ல வேண்டாம்
* தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறை வெளியீடு

சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு பணிகளை துவங்கும் முன் கலெக்டரின் ஒப்புதல் பெற வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பணியமர்த்தப்படக்கூடாது என்பன உள்பட பல்வேறு வழிகாட்டி ெநறிமுறைகளை தமிழக அரசு வழிகாட்டி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டம், ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், ஏரி, குளங்களை தூர்வாருவது, சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இப்பணிகள் நடைபெறும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக வழிகாட்டி நெறிமுறை வகுத்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:
* கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பரவல் தடுப்புக்காக தடை செய்யப்பட்ட பகுதிகளில் பணிகள் துவங்கக்கூடாது.
* கலெக்டர்கள், பணிகள் மீண்டும் துவங்க வேண்டிய பகுதிகள்/இடங்கள்/குக்கிராமங்கள் ஆகிய இடங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளையும் துவங்கும் முன் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
* ஒப்பந்ததாரர்கள் உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* வேலைக்கு 55 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பணியமர்த்தப்படக்கூடாது. உயர் ரத்தம் அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் இருதய நோய், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பிற தீவிர உடல் உபாதைகள் உள்ள நபர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
* சளி, இருமல், தும்மல், சுவாச பிரச்னை மற்றும் லேசான காய்ச்சல் இருந்தாலும் கூட அத்தகயை நபர்கள் உட்பட அனைவரும் கண்டிப்பாக பணி மேற்பார்வையாளர்களால் வேலைக்கு அனுமதிக்கப்படக்கூடாது.
* தொழிலாளர்கள் ஒட்டுமொத்த செல்லுதல் மற்றும் கூட்டமாக அழைத்து வருதல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் பட்டியலை பராமரித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும்.
* நோய் கட்டுப்பாட்டு மண்டலம், சிறப்பு வட்டாரங்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் சுகாதாரத்துறை மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புதிதாக அறிவிக்கப்பட்ட நோய் தடுப்பு மண்டலங்களில் ஏதேனும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பின் அப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், மறு உத்தரவு வரும் வரை புதிதாக பணிகள் துவங்கப்படக்கூடாது.



Tags : Collector , 100 day program, workers, corona, curfew
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...