×

திங்கள்சந்தை அருகே பரபரப்பு: நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் இளம்பெண் ஓட்டம்: ஊரடங்கால் திருமண தேதி 2 முறை ஒத்திவைப்பு

திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் ஊரடங்கால் திருமண தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் மனம் உடைந்த பட்டதாரி பெண் நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுனி (20 பெயர் மாற்றம்). பட்டதாரி பெண். இவருக்கும் நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது மார்ச் 25ம் தேதி திருமணம் நடத்துவது என தேதி குறிக்கப்பட்டது. இதற்காக, உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர்.இந்தநிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமண தேதி ஏப்ரலுக்கு மாற்றப்பட்டது. எனினும் போனில் பேசி தொடர்பை வளர்த்து வந்தனர்.

ஆனால், ஊரடங்கு மே 3ம்தேதி வரை நீட்டிப்பு செய்து அரசால் அறிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் திருமண தேதியை மீண்டும் மாற்றி ைவக்க இருவரின் வீட்டாரும் முடிவு செய்தனர். மே 3ம்தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீடிப்பு செய்யப்படலாம் என தகவல் பரவியதால் மணமக்கள் இருவரும் கலக்கம் அடைந்தனர்.
இந்தநிலையில் 25ம்தேதி சுனி தனது பெற்றோரிடம் வீட்டருகே உள்ள மரத்தில் மாங்காய் பறித்து வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

திடீரென வீட்டில் ஒரு கடிதம் இருந்ததை கண்டனர். அதில், ‘இருமுறை திருமண தேதி மாற்றி வைக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். எனவே, சுரேஷுடன் பேசி ஒரு முடிவு எடுத்தோம். இதன்படி நான் அவருடன் செல்கிறேன். என்ைன யாரும் தேட வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  இதை பார்த்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா ஊரடங்கால் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது போலீசார் கண்ணில் படாமல் 2 பேரும் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Teenage Flow with Engaged Youth: Currency Wedding , Kumari district, corona, curfew, teenagers
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!