×

கேரளாவில் லாக்-டவுனால் ருசிகரம்; வீடியோ கான்பரன்சில் புதுவித திருமணம்: இன்ஜினியரை மணந்த வங்கி ஊழியர்

திருவனந்தபுரம்: கேரளாவில் லாக்-டவுன் காரணமாக, லக்னோவில் உள்ள மணமகளுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மணமகன் தாலிகட்டி திருமணம் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். வங்கியில் பணிபுரிந்து வருகிறார். ஆலப்புழா பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா. லக்ேனாவில் இன்ஜினியராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது ஏப். 26ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதால் அஞ்சனாவால் ஊருக்கு வரமுடியாத நிலை உருவானது.

இருப்பினும் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் தீர்மானித்தனர். இதையடுத்து ஆன்-லைன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்த அவர்கள் தீர்மானித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அஞ்சனா மணக்கோலத்தில் தயாரானார். ஸ்ரீஜித்தும் மணமகன் அலங்காரத்துடன் தனது பெற்றோர், உறவினர்களுடன் மணமகள் வீடான பள்ளிப்பாடு சென்றார். முன்னதாக லக்ேனாவிலும், பள்ளிப்பாட்டிலும் ஆன்-லைன் வீடியோ கான்பரன்சுக்கான ஏற்பாடுகள் ெசய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் முகூர்த்த ேநரத்தில் ஸ்ரீஜித் ஸ்மார்ட் போனில் பார்த்தபடியே மணமகளின் வீடியோ காட்சியில் தாலி கட்டினார். இதையடுத்து லக்னோவில் அஞ்சலி தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்டார். பின்னர் ஜித் செல்ேபானில் மணமகளுக்கு குங்குமம் வைத்தார். அதைப்பார்த்த அஞ்சலி தனிக்குத்தானே குங்குமத்தை வைத்துக்கொண்டார். இந்த சுவாரஸ்ய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் லாக்-டவுன் முடிந்த பிறகு அஞ்சலி கேரளா வந்து கணவருடன் இணைவார் என மணமகள் வீட்டார் தெரிவித்தனர்.

Tags : Bank Employee ,Lock-Down ,Kerala ,Video Conferencing , Kerala, Videoconference, Newly Married
× RELATED கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு;...