×

தமிழகத்தில் கொரோனா பார்வையில் சிக்குவதில் 13-60 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,600-ஆக உயர்வு

சென்னை: கொரோனா தொற்று அறிகுறியுடன் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1937-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வயதானவர்கள், எதிர்ப்புசக்தி குறைந்தவர்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும் என்று கூறப்படுவதால் வயதானவர்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.

கொரோனா வைரஸ் முதலில் 55 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் அதிகமாக தாக்கி வந்தது. தற்போது குழந்தைகள் உள்பட வயது வித்தியாசம் பார்க்காமல் இந்நோய் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1970 -ஆக உயர்ந்துள்ளது. அதன்படி விவரங்கள்;

^ இன்று பாதிக்கப்பட்டவர்கள்        : 33 ஆண்கள், 19 பெண்கள்

^ தமிழகத்தில் மொத்த பாதிப்பில் : 1,312 ஆண்கள், 625 பெண்கள்

^ 0-12 வயதுக்கு உட்பட்டவர்கள்    :  60ஆண், 51 பெண்; மொத்தம் 111

^ 13-60 வயதுக்கு உட்பட்டவர்கள்  :  1093ஆண்கள், 507 பெண்கள்; மொத்தம் 1,600

^ 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்     :  159 ஆண்கள், 67 பெண்கள்; மொத்தம் 226

Tags : Tamil Nadu ,victims ,adults , Tamilnadu, Corona
× RELATED சென்னையில் சாலையோர நடைபாதைகளில்...