×

நாக்கை கட்டுப்படுத்த முடியாத கூட்டம் சிக்கன், மட்டன், மீன் சமைத்து சாப்பிட சென்னையில் இருந்து திருப்போரூர் வந்தனர்

சென்னை. ஊரடங்கில் சென்னை பகுதியில் அசைவ உணவு கிடைக்காது என்பதால் நாக்கை கட்டுப்படுத்த முடியாத கூட்டம் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் தங்கியது. இதை அறிந்த போலீசார் நாலு நாள் அசைவம் சாப்பிடாமல் உங்களால் இருக்க முடியாதா... சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும் என்று எச்சரித்து சென்னைக்கே திருப்பி அனுப்பினர்.சென்னையில் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு ேநற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு நாட்களும் சென்னையில் இருந்தால் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்டவை கிடைக்காது. இதனால் நான்கு நாட்களும் வெஜிடபிள் மட்டுமே சாப்பிட முடியாது என்ற நிலைக்கு வந்தது சென்னை கொருக்கு பேட்டையை சேர்ந்த கும்பல் ஒன்று.

இதையடுத்து முழு ஊரடங்கு இல்லாத பகுதிக்கு சென்று சிக்கன், மட்டன் கிடைக்கும் என்று சிலர் அவர்களுக்கு ஐடியா கொடுத்தனர். இதையடுத்து 10க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு கார்களில் முழு ஊரங்கு இல்லாத கிராம பகுதி எது என்று நண்பர்களிடம் கேட்டனர். இதையடுத்து அவர்கள் திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் அனைத்து விதமான அசைவ உணவுகளும் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10க்கும் அங்கிருந்த கோயில் வளாகத்தில் தங்கினர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கோயிலில் வெளிநபர்கள் தங்கக் கூடாது என்று பொதுமக்கள் எச்சரித்தும். அவர்கள் வெளியேற மறுத்தனர்.

இதையடுத்து திருப்போரூர் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர். போலீசார் வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த நபர்கள் என்பதும் சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சென்னையில் ஆட்டிறைச்சி, மீன் ஆகியவை கிடைக்காது. ஆனால் கிராமங்களில் தாராளமாக கிடைக்கும் என்பதால் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட தண்டலம் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், கொருக்கு பேட்டை நபர்களை அழைத்து நான்கு நாட்கள் அசைவம் சாப்பிடாமல், வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க முடியாதா.

அசைவம் சாப்பிடாவிட்டால் செத்தா போய்விடுவீர்கள் என்றும் சரமாரியாக கேட்டனர். இதுபோன்று செய்தால் உங்கள் மூலம் கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே கிராமத்தினர் அச்சப்படுவது சரிதானே என்றும் கேள்வி எழுப்பி அவர்களை எச்சரிக்கை செய்து மீண்டும் சென்னை கொருக்கு பேட்டைக்கே விரட்டியடித்தனர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Tags : crowd ,Tiruppore ,Chennai , Chicken, Mattan, Fish, Chennai, Tiruppore
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...