×

கொரோனாவில் இருந்து மீண்டு வர பொறுமையும், கட்டுப்பாடும், தன்னம்பிக்கையும் பெரிய அளவில் உதவும்: தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுவதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 5,914 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில் தொற்று காரணமாக இதுவரை 826 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று செய்தியாளார் சந்திப்பில், “ இந்திய ராணுவ வீரர்களை, கொரோனா வைரசிடம் இருந்து காக்க வேண்டியது அவசியம் என்றும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என்றும் கூறினார். மேலும் முப்படைகளையும் கொரோனா சிறிய அளவில் தான் பாதித்துள்ளது. பொறுமை மற்றும் கட்டுப்பாட்டுடன் இருந்ததால் தான், கொரோனாவில் இருந்து எங்களை பாதுகாக்க முடிந்தது. கொரோனாவை எதிர்த்து போரிட வேண்டுமானால், நாம் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை ஏற்று கொள்ள வேண்டும்.

கொரோனாவில் இருந்து மீண்டு வர பொறுமையும், கட்டுப்பாடும், தன்னம்பிக்கையும் நமக்கு பெரிய அளவில் உதவும். முப்படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவு செய்வோம். எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளை எதிர்கொள்ளும் திறமை உள்ளது. பிராந்திய சக்தியாக உருவெடுக்க வேண்டுமானால், மற்றவர்களுக்கு உதவ வேண்டுதே தவிர சார்ந்திருக்கக்கூடாது. மேக் இன் இந்தியாவை ஆதரிப்பது முக்கியம். இந்த திட்டம் மூலம், நமக்கு தேவையான ஆயுதங்களை இங்கேயே தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Bipin Rawat ,Corona ,recovery , Corona, Patience, Confidence, Commander in Chief, Pippin Rawat
× RELATED தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம்...