×

தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை: நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா விளாசல்

நீலகிரி: தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். குன்னூரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தபோது அன்றைக்கு உடனே முதல்வர் சென்றார். தலைமை தளபதி இறந்தபோது வராத மோடி, எங்களுக்கு தேச பக்தி இல்லை என்று கூறுகிறார். தலைமை தளபதி இறந்தபோது வராத பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்துக்காக நீலகிரி வருவதாக ஆ.ராசா விமர்சனம் செய்தார்.

The post தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை: நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா விளாசல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Nilgiris ,DMK ,A. Raza Vlasal ,A. Raza ,Triforce ,Bipin Rawat ,Coonoor ,Chief Minister ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...