ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நட்சத்திரங்கள் விராத் கோஹ்லி, டி வில்லியர்ஸ் இருவரும் 2016 ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியின்போது தாங்கள் உபயோகித்த பேட், கையுறைகள், கால்காப்பு உள்ளிட்ட பொருட்களை கொரோனா நிவாரண நிதி திரட்டுவதற்காக ஏலம் விட முடிவு செய்துள்ளனர். குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் இருவரும் சதம் விளாசியதுடன் 229 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் குறித்து கோஹ்லி, டி வில்லியர்ஸ் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வீடியோவையும் ஆர்சிபி நேற்று வெளியிட்டுள்ளது.
