×

தெலுங்கு படத்தை ரீமேக் செய்கிறார் விஜய் சேதுபதி

சென்னை: தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை அவரே தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவர் புதிதாக நடித்து வரும் தெலுங்கு படம் உப்பெண்ணா. இந்த படத்தில் பஞ்ச விஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். புச்சி பாபு சனா இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் கதை பிடித்துவிட்டதால் இதை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார். இதற்கான தமிழ் ரீமேக் உரிமையை அவர் வாங்கிவிட்டார். தமிழில் அவர் நடிப்பாரா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

Tags : Vijay Sethupathi , Telugu film, remake, Vijay Sethupathi
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்