×

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1,387 குடிமராமத்து திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 377 பணிகளுக்கு ரூ.155 கோடியும், திருச்சி மண்டலத்தில் 458 பணிகளை மேற்கொள்ள ரூ.140 கோடியும், மதுரை மண்டலத்தில் 306 பணிகளுக்கு ரூ.156 கோடியும், கோவை மண்டலத்தில் 246 பணிகளை மேற்கொள்ள ரூ.45 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Government ,Tamil Nadu ,Rs ,districts , Citizenship Work, Government of Tamil Nadu, Government
× RELATED வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின்...