×

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கொரோனா தடுப்பின்போது ஒரு வேளை துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் அவர்களுடைய இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவர்களும் கறுப்புப்பட்டை அணிந்து பணிபுரியும்படி அனைத்து அரசு மருத்துவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. தங்களது அவலநிலை குறித்து மருத்துவர்கள் போராடி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்குதான் காரணம்.

கொரோனா நோய்க்காக சிகிச்சை வழங்கி, தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்த டாக்டர் சைமன், டாக்டர் லட்சமி நாராயணரெட்டி, டாக்டர் ஜெயமோகன் ஆகியோரின் உடல்களுக்கு கவுரவமான முறையில் இறுதிச்சடங்குகள் நடக்கமுடியாத அவலநிலை ஏற்பட்டது. இத்தகைய இறுதி சடங்குகளில் தமிழக அரசை சேர்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பங்கேற்று அஞ்சலி செலுத்தாதது மிகுந்த வேதனைக்குரியது. அதேபோல சமீபத்தில் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் அடக்கம் செய்யவேண்டிய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் செய்யாமல் வேலங்காடு சுடுகாட்டில் நடு இரவில் ஒரு அனாதை போல ஒருசிலர் முன்னிலையில் புதைத்துவிட்டார்கள் என்று அவரது மனைவி ஆனந்தி கூறியிருப்பது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால்தான் எனது கணவரின் ஆன்மா சாந்தியடையும் என்று அவர் கோரியிருக்கிறார். அவரது கோரிக்கையில் உள்ள மனக்குமுரலையும், நியாயத்தையும் தமிழக முதலமைச்சர் புரிந்துகொண்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : doctors ,KSAlagiri ,funeral ,government , KSAllagiri,insists , full government, honors
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...