×

கமலின் கொரோனா பாடலை பாடும் முன்னணி பாடகர்கள்

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அமுலில் உள்ளது. மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் விதமாக திரைப்பட இசை கலைஞர்கள் பாடல்களை உருவாக்கி அதனை யூ டியூப்பில் வெளியிட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள பாடல் ஒன்று தயாராகி வருகிறது. அன்பும் அறிவும்... என தொடங்கும் அந்த பாடலை கமலுடன் இணைந்து அனிருத், யுவன் சங்கர் ராஜா, தேவி பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் ஆகியோர் சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் பாடியுள்ளனர். வருகிற 24ம் தேதி வெளிவருகிறது.

Tags : singers ,Kamal ,Corona , Kamal, Corona song
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...