×

தமிழகம் முழுவதும் நேரக்கட்டுப்பாடு அறிமுகம் சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் 1 மணி வரை இயங்கும்

* இன்று முதல் அமல்
* ஒரு மணி நேரத்துக்கு 8 டோக்கன்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் பகல் ஒரு மணி வரையே செயல்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில்  பத்திரப்பதிவு அலுவலர்களும் ஏப்ரல் 20ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி ஜோதி
நிர்மலா சாமிஉத்தரவிட்டார். மேலும் ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் பதிவு செய்தால் போதும் எனவும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உரிய பாதுகாப்புடன் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனால், வேறுவழியின்றி கடந்த 20ம் தேதி சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் இயங்க தொடங்கின. ஆனால், எதிர்பார்த்த அளவு பத்திரங்கள் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 20ம் தேதி 580 பதிவுகள் மட்டுமே நடைபெற்றது. 21ம் தேதி 428 பத்திரங்கள் மட்டுமே பதிவானது. நேற்று மட்டும் 1193 பத்திரங்கள் பதிவாகியுள்ளன. தற்போது கொரோனா பீதியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர். வெளியூரில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வர போக்குவரத்து இல்லாததால், பதிவுகள் குறைந்து காணப்படுகிறது. இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அலுவலகங்கள் இயங்க பதிவுத்துறை ஐஜி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பத்திரப்பதிவு செய்ய வருவோர் ஆன்லைனில் பகல் ஒரு மணி வரை மட்டுமே டோக்கன்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஆன்லைனில் டோக்கன்களை பதிவு செய்ய இயலாது. அதன்படி ஒரு மணி நேரத்திற்கு 8 டோக்கன்கள் வீதம் 24 டோக்கன்களை நாள் ஒன்றுக்கு ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Tags : Sub-Registrar's Office ,Tamil Nadu , Sub-Registrar's Office,run till 1 pm, all over Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...