×

திருவொற்றியூர், எர்ணாவூர் பகுதிகளில் தனிமை வார்டு அமைக்க எதிர்ப்பு: 3 இடங்களில் போராட்டம்

திருவெற்றியூர்: சென்னையில் கொரோனோ வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அரசு  துறை மற்றும் தனியார் கட்டிடங்களில் சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது. இந்நிலையில், திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே காலியாக உள்ள குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான 10  மாடி குடியிருப்பு, எர்ணாவூர்  காசிகோயில் குப்பம் அருகே உள்ள  குடியிருப்பு ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று முன்தினம் நள்ளிரவில்  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மேற்கண்ட 2 குடியிருப்புகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், எர்ணாவூரில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கும் போராட்டம் நடத்தினர். எர்ணாவூர், திருவொற்றியூர் பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : places ,Thiruvottiyur , Opposition , isolation ward ,Thiruvottiyur, Ernakavur,Struggle in 3 places
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!