×

எபோலா நோய்க்கு பயன்படுத்தப்பட்ட ரெம்டிசிவிர் மருந்தைக் உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைவதாக ஆய்வில் தகவல்

வாஷிங்டன் : எபோலா வைரஸுக்கு  பயன்படுத்தப்பட்ட ரெம்டிசிவிர் என்கிற மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,182,823 பேர் பாதித்துள்ளனர். 145,551பேர் உயிரிழந்த நிலையில், 547,679 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ரெம்டிசிவிர் என்கிற மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ரெம்டிசிவிர்,அமெரிக்க அரசு மற்றும் கிலீட் சயின்சஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்து. அதனை எபோலா வைரஸ் தொற்றிற்கு பயன்படுத்தினர். மனித உடலுக்குள் நிகழும் வைரஸ் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் தன்மை இந்த மருந்திற்கு உள்ளதால், கொரோனா வைரஸுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணினர்.

இதையடுத்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், ரெம்டிசிவிர் மருந்தைத் தீவிர சுவாசக் கோளாறு இருந்த கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இருவரைத் தவிர அனைவரும் ஒருவாரத்துக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் மட்டும் நோயின் தீவிரத்தால் உயிரிழந்ததாக மருத்துவர் கேத்லீன் முல்லன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.தேசிய நலவாழ்வு மையம் ரெம்டிசிவிர் உட்படப் பல்வேறு மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்து வருவதாகவும் கேத்லீன் முல்லர் தெரிவித்துள்ளார்.

Tags : coronavirus patients ,Remedicavir , Ebola Disease, Remedicavir, Drug, Corona, Patients, In Cure, Research, Information
× RELATED கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்க சிஎம்ஆர் ஒப்புதல்