×

* உடற்பயிற்சி * உணவு கட்டுப்பாடு * சரியான தூக்கம் * கலந்துரையாடல்,.. சரியான வாழ்க்கை முறைக்கு திரும்பும் நேரம் இது

ஊரடங்கால் ஆரோக்கியம் முடங்காமல் இருக்க டாக்டர் அறிவுரை
குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு நல்லொழுக்கம், சமூக ஒற்றுமை பற்றி சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கு என்ன விருப்பமோ அவர்களை அதை செய்ய ெசால்லவேண்டும்.

சென்னை: ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றாவிட்டால் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24 முதல் மே 3ம் ேததி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பரபரப்பாக இயங்கி வந்த தமிழர்களின் இயல்பான வாழ்க்கை முறையை மாற்றியது மட்டுமில்லாமல் உடல், மனரீதியாகவும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு கடந்த இரண்டு தலைமுறையினர் மட்டுமின்றி இன்றைய தலைமுறையினருக்கும் ரொம்பவே புதிது. இதனால் டிவி, செல்போன் போன்றவற்றுடன் உடல் பயிற்சி இல்லாமல் நேரத்தை கடத்தி வருகின்றனர்.

40 நாட்கள் இது போல மனிதர்கள் இருந்தால் எந்த அளவுக்கு மக்களின் எதிர்கால உடல்நிலையை பாதிக்கும். இதுகுறித்து டாக்டர் எம்எம்.காசிம் கூறியதாவது;
 இயந்திரமயமான வாழ்க்கை முறையால் நாம் நிறைய விஷயத்தை தவிர்த்து இருக்கிறோம். டாக்டர் ஆலோசனை அளித்த வாழ்க்கை வழிகாட்டி முறைகளை கடைப்பிடிக்காமல் இருந்து வருகிறோம். இந்த வாழ்க்கை சூழலினால்,  மன அழுத்தத்தை சந்தித்து வருகிறோம். ஆனால், இந்த மாதிரியான நேரத்தில் நாம் செய்யத் தவறிய நல்ல வழிகாட்டு முறையை கடைபிடிக்கலாம். அதாவது இதுவரை இருந்த வாழ்க்கை முறையை மாற்றி, ஆரோக்கிய பாதைக்கு செல்லலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாம் வேலைக்கு செல்வதால் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்தோம். ஆனால், இந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

இந்த உடற்பயிற்சிகளை 3 வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஏரோ பிக் (aerobic), வெயிட் பியரிங் (weight bearing), பிளக்சிபிலிடி எக்ஸர்சைஸ் (flexibility) என்று பிரிக்கலாம்.
ஊரடங்கால் இப்போது குடும்பத்துடன் இணைந்து கலந்துரையாட வேண்டும். இந்த நேரத்தை நாம் உரையாட வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு நல்லொழுக்கம், சமூக ஒற்றுமை பற்றி சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கு என்ன விருப்பமோ அவர்களை அதை செய்ய ெசால்லவேண்டும். புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, இசை கற்று ெகாள்வது என்பது போன்ற இதர செயல்பாடுகளிலும் தங்களது திறமையை வளர்க்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

 அதே போன்று நமது உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். குறைந்த கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட் உணவு பொருட்கள், உப்பும் குறைவாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த டயட்டை எப்போதும் பின்பற்ற வேண்டும். நாம் மூன்று முறை சாப்பிடுகிறோம். மூன்று முறையும் அதிகமான உணவை எடுத்து ெகாள்கிறோம். அப்படி இல்லாமல் காலை உணவு கொஞ்சம் அதிகமாக எடுத்து கொள்ளலாம். மதிய உணவு அளவோடு இருக்க வேண்டும். அதே மாதிரி இரவு உணவு எப்போதும் குறைவாக எடுத்து கொள்ள வேண்டும். தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும். தொலைக்காட்சி பார்க்கும் போது, எண்ணெய் உணவு பொருட்கள் (ஸ்நாக்ஸ்) எடுத்து கொள்ளக் கூடாது. இப்போது இரவு நேரத்தில் தூங்காமல் பலர் டிவி பார்க்கின்றனர். அப்போது தங்களை அறியாமலேயே ஸ்நாக்ஸ் எடுத்து கொள்கின்றனர். இதை முதலில் தவிர்க்க வேண்டும்.

 இரவு நேரத்தில் விழித்து இருக்க கூடாது. காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேணடும். அப்போது தான் மன அழுத்தம் இருக்காது. நாம் விடுமுறையில் இருப்பதால் தூங்காமல் இருக்க கூடாது. மேலும், இப்போது டாக்டரை பார்க்க முடியாவிட்டாலும், நாம் ரெகுலராக மருந்தை எடுக்க வேண்டும். அதை கைவிட்டு விடக்கூடாது. மன அழுத்தத்தினை குறைக்க யோகா செய்ய வேண்டும். நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்க கூடாது. நாம் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்தால் நமக்கு உடல் வலி ஏற்படும். உடல் உழைப்பு இல்லாமல் திடீரென வேலைக்கு செல்லும் போது, முதுகு வலி, கால் வலி, கை வலி, கழுத்து வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்து இருப்பது, சாப்பாட்டை நேரத்திற்கு எடுத்து கொள்ளாதது, அதிகமாக சாப்பிடும்போது சர்க்கரை அதிகமாக வாய்ப்புள்ளது. தற்போது, 40 நாட்கள் வரை வீட்டில் இருக்கும்போது, அவர்கள் தங்களது வாழ்க்கை முறையை சரியாக பின்பற்றினால், அவர்கள் வேலைக்கு செல்லும் போது எந்தவிதமான பிரச்னையும் இருக்காது. ஆனால், அப்படி செய்யாமல் தங்களது இஷ்டத்திற்கு தூங்குவது, சாப்பிடுவது என்று இருந்தால் அது அவர்களுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Exercise , Exercise, diet, proper sleep: curfew, discussion,
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...