×

நவம்பரில் 2வது சுற்று வரும்: சீன மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால், இது தற்காலிகம்தான் என சீன மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார். இது குறித்து ஷாங்காயில் உள்ள கொரோனா நோய் தொற்று பிரிவுத் தலைமை மருத்துவர் ஜாங் வென்கோங் கூறுகையில், ``இதற்கு மேல் சீனா எந்த முடக்கத்தையும் செயல்படுத்தாது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்று நாளிதழில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்துவது, அமல்படுத்துவதன் மூலம் ஒரு நோய் தொற்றை நீண்ட காலத்துக்கு கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும்.

பின்னர், இயல்பாகவே வேலைக்கு செல்வதற்கோ, வாழ்வதற்கோ முடியும். வைரசை முற்றிலுமாக தடுக்கவோ, ஒழிக்கவோ இயலாது. உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்திய பின்னரே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். அதுவரை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து வைரசுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும். இந்த போரில் வரும் நவம்பர் மாதம் கொரோனாவின் இரண்டாவது சுற்றில் உலக நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.


Tags : expert ,round ,Chinese , Corona, China, Medical Expert, Corona
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...