×

ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அனைத்து கமிஷனர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் டிஜிபி ரவி உத்தரவிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அனைத்து கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப பிரச்னைகள் உலக அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் காவல் துறைக்கு தெரிவித்துள்ளது. தினமும் குடும்ப பிரச்னை காரணமாக மாநில காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 25 அழைப்புகள் வருகிறது. மேலும், பெண்கள் உதவி எண் 1091க்கும் இதுதொடர்பான புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த எண் எந்த பகுதியிலாவது வேலை செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட போலீசார் அதை உடனே சரிசெய்ய வேண்டும். அழைப்புகளின்படி சம்பந்தப்பட்ட போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் வரும் பகுதிகளில் மகளிர் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை சம்பந்தப்பட்ட மகளிர் போலீசார் கண்காணித்து வர வேண்டும். அதிகப்படியாக வெளிமாநில பெண்கள் வேலை செய்வதற்காக தமிழகத்திற்கு குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் என பல பகுதிகளுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்கம் இடங்கள் சரியாக சம்பந்தப்பட்ட நபர்கள் வழங்க வேண்டும். வடமாநில பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்களுக்கு பாலியல் ரீதியாக எந்த தொந்தரவும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மகளிர் போலீசார் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக மகளிர் போலீசார் தனி பதிவேடு பராமரிக்க ேவண்டும்.  பெண்கள் தங்கி உள்ள விடுதிகளையும் கண்காணிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Commissioners ,SPs ,women , To ensure , women,time , curfew,Commissioners, orders for SPs
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...