×

ஊசூர் அடுத்த குருமலை மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்கள் நடமாட்டம் உள்ளதா?: ட்ரோன் கேமராவில் கண்காணித்த போலீசார்

அணைக்கட்டு:  ஊசூர் அடுத்த குருமலை மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்களின் நடமாட்டம் உள்ளதா என ட்ேரான் கேமராவை பறக்கவிட்டு வீடியோ மூலம் போலீசார் கண்காணித்தனர்.அணைக்கட்டு தாலுகா மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி அடிவாரத்தில் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாராய விற்பனை வெகுவாக நடக்கிறது. இதற்கிடையே, மலையில் சாராயம் காய்ச்சி விற்பவர்களின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் நேற்று அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வேலூர் வனசரகத்திற்குட்பட்ட குருமலை  மலையில் ஹெலிகேம் கேமராவை (ட்ரோன்) பறக்கவிட்டு, அதன் மூலம் மலையில் யாராவது சாராயம் காய்ச்சுகிறார்களா? விற்கிறார்களா என வீடியோ எடுத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், குருமலை மலைப்பகுதி முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து பார்க்கப்பட்டது. அடிவாரத்திற்குட்பட்ட மலைப்பகுதியில் பதுங்கி விற்பதால், அதில் சரியாக பதியவில்லை. இருப்பினும் மலையில் சாராய விற்பனையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.



Tags : hill ,Ussur ,Kurusimalai ,Kurusumalai , Drunken, Kurusumalai , Ussur, Police,camera
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!