×

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் 45,000 அங்கன்வாடி பணியாளர்கள்: எந்தவித பாதுகாப்பு வசதியும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் 45,000 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு வசதியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கூறியதாவது: கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்தவிதமான வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.

முகக்கவசம், கையுறை போன்ற வசதிகளை செய்யவில்லை. சாப்பாடு, தண்ணீர் போன்ற எந்த வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. சுகாதாரத்துறையினரிடம் கேட்டால் எங்களுக்கே பாதுகாப்பு கவசங்கள் இல்லை என்று கூறுகின்றனர். உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் களத்தில் இருக்கும் எங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனென்றே தெரியவில்லை. டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் தான் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால், அங்கன்வாடி பணியாளர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை முதல்வரிடம் இதுவரை சொல்லாமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. களத்தில் இறங்கி பணியாற்ற நாங்கள் பயப்படவில்லை. எங்களுக்கு தேவையான அடிப்படை வசதியை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Tags : Anganwadi ,house ,Tamil Nadu , Tamilnadu, Corona, Survey, Anganwadi Staff
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்