×

கொள்முதல் செய்யாமல் வீணான நெல், வாழைக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:  நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று கொள்முதல் செய்யாமல் வீணாகிப் போன நெல் முழுவதற்கும் முழு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ெபாதுச்செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழக அரசின் தாமதமான நெல்கொள்முதல் உத்தரவு மற்றும் மாவட்ட அதிகாரிகள் உத்தரவை செயல்படுத்தாத காரணத்தினால் திடீர் மழை மற்றும் காற்றால் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து எதற்கும் உதவாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசின் அலட்சியமான போக்கே காரணம். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று கொள்முதல் செய்யாமல் வீணாகிப் போன நெல் முழுவதற்கும் முழுமையான இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

சூறாவளிக் காற்று வீசியதால் தேனி, திருச்சி, கரூர், பெரம்பலுர், திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை சாய்ந்து கோடிக்கணக்கான ரூபாய் இழப்புக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். வாழை பாதிப்பு குறித்து உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Farmers' Union ,Paddy ,Tamil Nadu Farmers Association , Paddy, Banana, Tamil Nadu Government, Corona, Tamil Nadu Farmers Association
× RELATED நெல்லை கால்வாய் கடைமடை பகுதிகளில்...