×

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ரூ.50 லட்சம் நிதியுதவி.

சென்னை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கொரோனா நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் விதமாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ₹50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. கூடுதலாக ஜிஆர்டியின் ரீடெய்ல் ஸ்டோர் பணியாளர் உணவகம் மூலமாக மார்ச் 26ம் தேதி முதல் தினசரி 2500 பேருக்கான உணவை வெளிமாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சேவையை விரிவாக வழங்கும் வகையில் ஜிஆர்டி ஓட்டல்ஸ் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு தயாரித்து, நலிந்த நிலையில் உள்ளோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைப்பினருக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஜிஆர்டி மேலாண்மை இயக்குனர் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பு பணியில் தங்களை இணைத்து கொண்டுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மற்றும் ஓட்டல்ஸ் குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வை மனதார பாராட்டுகிறேன்,’’ என்றார். ஜிஆர்டி மேலாண்மை இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் இந்தியா பேரிடர்களை மன உறுதியோடும், ஒற்றுமையுடனும் எதிர்கொண்டதை போலவே தற்போதும் உள்ள சவாலை சந்திப்போம். மக்களோடு உடன் இருப்பதை பிரதிபலிக்கவே இந்த நிதியுதவி அளித்துள்ளோம். வெகு விரைவில் நாம் மீண்டு எழுவோம்,’’ என்றார்.


Tags : GRT Jewelers , GRT Jewelers, Sponsored, Rs.50 Lakhs.
× RELATED ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை