×

உலகளாவிய கொரோனா பரவலுக்கும் 5ஜி தொழில்நுட்பத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை : விஞ்ஞானிகள் கருத்து

டெல்லி : உலகளாவிய கொரோனா பரவலுக்கும் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனா 5ஜி நெட்வொர்க் மூலம் தான் பரவி வருவதாக தீயாக ஒரு செய்தி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.அதாவது, 5ஜி டவர்களில் இருந்து வெளியாகும் அலை வரிசை காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சிவிடும். அதன்பின் காற்றில் அது முக்கியமான வாயுக்களை வெளியிடும். இந்த வாயுக்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவும். இது ஒரு நெட்வொர்க் போல பரவும். உலக நாடுகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகிறது. கொரோனா வைரஸ் என்பது திட்டமிட்ட தாக்குதல் என்று வதந்திகள் வெளியானது. கொரோனா தொற்று ஏற்படுவதற்கு 5ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்ற வதந்தியால் இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா பரவலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மொபைல் போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள், எக்ஸ் கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்களை காட்டிலும் குறைவான அதிர்வெண்களைக் கொண்ட ரேடியோ சிக்னல்களை மட்டுமே 5ஜி வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவை மனிதர்களின் உயிரணு அல்லது மரபணுவை சேதப்படுத்தும் அளவிற்கு வலிமை ஆனவை அல்ல என்பதும் அவர்களின் கருத்து. சில நேரங்களில் சிக்னல்கள் மனித செல்களை சிறிதளவு வெப்பமாக்கும் வாய்ப்பு இருந்தாலும் அவை நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலி செய்திகளை பரப்பும் பதிவுகளை சமூக ஊடகங்கள் அகற்றி வருகின்றனர்.

Tags : scientists , Corona, infection, 5g, network, rumor, cellphone, towers, fire, deposit
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு