×

வீடுவீடாக சென்று கண்டறியும் பணி 16 மாவட்டங்களில் 6,88,473 பேரிடம் ஆய்வு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் திட்டம் வீடு வீடாக சென்று 16 மாவட்டங்களில் 1,82,815  வீடுகளில்  6,88,473 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன் (தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம்) செயல்படுத்தப் பட்டு வருகிறது. நேற்று வரை ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில், 3,698 களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இப்பணியில் 1,82,815 வீடுகளில், 6,88,473 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : districts ,households , Corona virus, Government of Tamil Nadu
× RELATED முதல்வர் பழனிசாமி 6,7-ஆம் தேதிகளில் 3 மாவட்டங்களில் ஆய்வு என தகவல்