நேரில் சந்திக்க முடியாததால் நடிகர் ராணாவுடன் வீடியோ காலில் பேசிய திரிஷா: காதல் தொடர்கிறதா?

சென்னை: நடிகை திரிஷா, தெலுங்கு நடிகர் ராணா இடையே காதல் என சில ஆண்டுகளுக்கு முன் தகவல் பரவியது. பிறகு இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. நீண்ட காலமாக இவர்கள் தொடர்பில் இல்லை என்றே சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ராணாவுக்கு வீடியோ கால் செய்து பல மணி நேரம் பேசியிருக்கிறார் திரிஷா. ஊரடங்கு உத்தரவு காரணமாக தன்னை திரிஷா தனிமைப்படுத்தி உள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவிலும் இதை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று ராணாவுக்கு வீடியோ கால் செய்து பல மணி நேரம் அவரிடம் பேசியுள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்திலும் தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து இவர்கள் காதல் இன்னும் முறியவில்லை என்றும் நேரில் சந்திக்க முடியாததால் அவர் வீடியோ காலில் பேசியிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.  ராணாவை தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடமும் வீடியோ காலில் திரிஷா பேசினாராம். இவருடன் திரிஷாவுக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories:

>