×

பிராட்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் மரம் முறிந்து விழுந்து 2 கார் சேதம்

தண்டையார்பேட்டை:  பிராட்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் பழமையான மரம் விழுந்து 2 கார்கள் சேதம் அடைந்தன. பிராட்வே மண்ணடி பிரகாசம் சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.   மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது அந்த பகுதியில் உள்ள பழமையான மரம் முறிந்து விழுந்தது. இரண்டு கார்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலின்பேரில் எஸ்பினேடு  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் யாரும் வராத காரணத்தால் இந்த மரம் விழுந்தபோது உயிரிப்பலி ஏற்படவில்லை.  மக்கள் நடமாட்டம் இருந்திருந்தால் விபத்து ஏற்பட்டு இருக்கும். இதுகுறித்து காரின் உரிமையாளருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : metro station ,Broadway , Broadway metro station, wood, 2 car damage
× RELATED சென்னை துறைமுகம் பகுதியில் 3000...