×

சென்னை துறைமுகம் பகுதியில் 3000 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் பகுதி திமுக சார்பில், நேற்றிரவு பிராட்வே, டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். இதில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 3000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு பிரியாணி அரிசி மூட்டை மற்றும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மத்தியசென்னை எம்பி தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், துறைமுகம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், கவுன்சிலர் பரிமளம், மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை செயலாளர் ஜாவித், வர்த்தகர் அணி உதயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை துறைமுகம் பகுதியில் 3000 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai Port ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Chennai East District ,Harbor ,Area ,DMK ,Broadway ,Donbosco School ,Ramzan ,PK Shekharbabu ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...