×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமைத்த உணவுகளை Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் விற்பனையகம் மூலம் விநியோகிக்க தடை : BIGBASKET-க்கு அனுமதி

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமைத்த உணவுகளை ஸ்விக்கி, ஸொமோட்டோ மூலம் விநியோகிக்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 10 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார்.வைரஸ் பரவுவதை தடுக்க, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். இந்த முடக்கம் ஏப்ரல் 14ம் தேதி வரை நீடிக்கும். அதே சமயம் அத்தியாவசிய கடைகள், சேவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகத்திலும் கொரோனா தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சமைத்த உணவுகளை ஸ்விக்கி, ஸொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் விற்பனையகம் மூலம் விநியோகிக்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளுடன் அரிசி, கோதுமை போன்ற ரேஷன் பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்களை விற்பனை செய்ய பிக்பாஸ்கெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் தன்னார்வலர்கள் சமைத்த உணவுகளை மக்களுக்கு விநியோகிக்கவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது. காய்கறிக்கடைகளில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை விட்டு நிற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,retailer ,Swiggy ,Zomato , Corona prohibits distribution of cooked foods through online sales, including Swiggy, Zomato: Allowing BIGBASKET
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...