×

தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம் உதயம்: நாகப்பட்டினத்தை 2 ஆக பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டம் உருவாக்கப்படும்...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய  அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், நாகை மாவட்டம், ஒரத்தூரில், 367 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் கடந்த 8-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகும் என்றார்.  இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று கொரோனா நிவாரணங்களை அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என  அறிவித்தார். மயிலாடுத்துறை தனி மாவட்டமாக உதயமாகும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : district ,Mayiladuthurai ,Tamil Nadu ,districts ,38th District ,Udayam , Udayam: The 38th District of Tamil Nadu will be divided into two districts - Mayiladuthurai
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...