×

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (முதல்வர்): இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்.ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர்): இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.கி.வீரமணி (திராவிட கழக தலைவர்): ஈழத்  தமிழர் நலன் இப்படி பலி பீடத்தில் நிறுத்தப்படுவதை மத்திய, மோடி அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கண்டித்துத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். ராமதாஸ் (பாமக நிறுவனர்): முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் 11ம் தேதி நடைபெறும்.கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்): இலங்கை அரசின் இந்த செயல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் இந்த இழி  செயலுக்கு துணைபோயுள்ளார்.  முத்தரசன்(இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்): இடிக்கப்பட்ட நினைவு தூணை உடனடியாக இலங்கை அரசு கட்டியமைக்க வலியுறுத்த வேண்டும். திருமாவளவன் (விசிக தலைவர்): சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.வேல்முருகன் (தலைவர் தமிழக வாழ்வுரிமை கட்சி): இலங்கையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,   சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளது. இதேபோல சரத்குமார், டிடிவி தினகரன், எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். …

The post முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mullivaikal ,Chennai ,Edappadi Palaniswami ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...