×

திருவொற்றியூர் தபால் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை இல்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தபால் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.  கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க  தமிழகம் முழுவதும்  திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் போன்றவை வருகின்ற 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகமாக கூடும்  வங்கி, இ-சேவை மையம் மற்றும் மாநகர பேருந்து போன்றவைகளில் கிருமி நாசினி தெளிப்பது, வைரஸ் கிருமி தாக்காமல் இருக்க தேவையான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, காவல் நிலையம் வரும் பொதுமக்கள் கை கழுவுவதற்கு சோப்பு தண்ணீர், முகக்கவசம் ஆகியவை வழங்கப்படுகிறது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் திருவெற்றியூர் தேரடி அருகே உள்ள தபால் நிலையத்தில் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் பெண்களே வருகின்றனர். ஆனால் இங்கு கொரோனா வைரஸ் தொடர்பாக மாநகராட்சியோ அல்லது தபால் துறையோ எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால்  இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் வைரஸ் தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அதிகாரிகள் உடனடியாக இங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : post office ,Thiruvottiyur , Thiruvottiyur, Post Office, Corona, Public
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...