×

கடனை தாமதமாக செலுத்த தொழில்துறையினருக்கு கூடுதல் அவகாசம்: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், தங்கள் கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பணமதிப்பு நீக்கம், பொருளாதார மந்தநிலை என பல்வேறு காரணங்களால் தொழிற்துறையினர் கடும் பாதிப்பை அடைந்து வருகின்றனர். கொரோனா வைரசால் தொழில் துறையினரின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே வராக்கடன்கள் அதிகரித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடன் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.   இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தொழில்துறையினருக்கு நிதி ஆதாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

ஜிஎஸ்டி தொடர்பான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’’ என்றார்.  இந்த கூட்டத்தில் பங்கேற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், தற்போதைய சூழ்நிலையில் கடும் பாதிப்பை அடைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரை மீட்க பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளனர்.  இதன்படி, இவர்கள் தங்கள் கடன் தொகைகளை தாமதமாக செலுத்த அனுமதி வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : government ,industrialists , Debt, industry, federal government
× RELATED கடவுளால் அனுப்பப்பட்டவர் 22...