×

தனியார் நிறுவன ஊழியரிடம் பைக் பறிப்பு: போலி காவலர்கள் 3 பேருக்கு வலை

சென்னை: வாகன சோதனை என தனியார் நிறுவன ஊழியரிடம் பைக்கை பறித்து சென்ற 3 போலி காவலர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாலிகிராமம் குலசேகரபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (19). தனியார் நிறுவன ஊழியர். ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது பைக்கில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது ஆற்காடு சாலையில் 3 பேர் வழிமறித்து “நாங்கள் காவலர்கள்” என்று கூறி பைக்கிற்கான ஆவணங்களை கேட்டனர். ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக அவர் கூறியதும், 3 பேரும் பைக்கிற்கான ஆவணங்களை கொண்டு வந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் காட்டி விட்டு பைக்கை எடுத்து செல்லும்படி கூறி பைக்கை எடுத்து சென்றனர்.

இந்நிலையில், பைக்கிற்கான ஆவணங்களுடன் விரும்பாக்கம் காவல்நிலையத்திற்கு விக்னேஷ் சென்று போலீசாரிடம் பைக் கேட்டபோது “நாங்கள் யாரும் உங்கள் பைக்கை பறிமுதல் செய்யவில்லையே” என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், காவலர்கள் என்று கூறிதான் தனது பைக்கை எடுத்து வந்ததாக கூறினார். அதன்பிறகு தான் நூதன முறையில் போலீஸ் என்று கூறி பைக்கை பறித்து சென்றது தெரியவந்தது.  அதைதொடர்ந்து விக்னேஷ் கொடுத்த புகாரின்படி போலீசார் வாகன சோதனை நடத்திய இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று 3 போலி போலீசாரை தேடி வருகின்றனர்.



Tags : guards ,company , Private company employee, bike racket, fake guards
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...