×

குர்கான்-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் 4 ஆண்டில் 2500 கோடி சுங்க கட்டணம் வசூல்: மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

புதுடெல்லி:  குர்கான்-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் ₹2500 கோடி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி மோதிலால் வோராவின் கேள்விக்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘குர்கான் -ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்க சாவடிகள் அமைந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் இவற்றில் 2500 கோடி சுங்க வரி  வசூலிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2016-2017ம் ஆண்டில் 569 கோடி, 2017-2018ம் ஆண்டு ₹666 கோடி, 2019-2020ம் ஆண்டு ₹708 கோடி, இந்த ஆண்டு பிப்ரவரி வரையில் 555 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது,’ என குறிப்பிட்டுள்ளார்.


Tags : highway ,Gurgaon ,Gadkari ,Jaipur ,Union , Gadkari, Jaipur, Highways, Union Minister of State for Gadkari
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!