×

பிஎஸ்எல் டி20 தொடர் நாக்அவுட் சுற்று பாதிப்பு

கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடந்து வந்த பிஎஸ்எல் டி20 தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த முல்தான் சுல்தான்ஸ் (14), கராச்சி கிங்ஸ் (11), லாகூர் கலந்தர்ஸ் (10), பெஷாவர் ஸல்மி (9) அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. முல்தான் சுல்தான்ஸ் - பெஷாவர் ஸல்மி, கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதும் அரை இறுதி ஆட்டங்கள் லாகூரில் நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாக் அவுட் சுற்று தள்ளிவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிபி தலைமை செயலதிகாரி வாசிம் கான் கூறுகையில், ‘வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர் யார் என்ற விவரம் குறித்து சொல்ல முடியாது. ஆனால், அந்த வீரர் ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த பிரச்னையை கையாள்வதில் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்’ என்றார்.Tags : PSL T20 , PSL T20, knockout round
× RELATED கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள்...