×

130 குழுக்கள் அமைக்கப்பட்டு புனேயில் வீடு, வீடாக சோதனை

புனே நகரில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநகராட்சியில் 130 குழுக்கள் அமைத்து வீடு வீடாக சோதனை நடத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் புனே மாநகராட்சியில் நேற்றைய நிலவரப்படி 7 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாநகராட்சி வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்துவதற்காக 130 குழுக்களை அமைத்துள்ளது.

இது தொடர்பாக புனே மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் ருபால் அகர்வால் கூறுகையில், `‘கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட 130 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானால் அந்த பகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுப்பணி தீவிரப்படுத்தப்படும். அப்போது கொரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும்’’ என்றார்.

Tags : house ,Pune ,teams , 130 groups, Pune, house, house, test
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்