×

கொரோனா வைரஸ் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் நிறைவு பெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, 2-வது வாரமாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று  வணிகம் தொடங்கிய உடனேயே பங்குச் சந்தையின் புள்ளிகள் மளமளவென குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, டி.எல்.எஃப் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில், மற்ற வங்கிகள் சுமார் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அவ்வங்கிப் பங்குகள் 50 சதவிகிதம்‌ உயர்ந்து வர்த்தக‌மாகியது.‌

இதற்கிடையில் அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42 காசு சரிந்து 74 ரூ‌பாய் 17 காசானது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2713 புள்ளிகள் குறைந்து 31,390 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 756 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,199 புள்ளிகளில் வணிகமாகி நிறைவு பெற்றது. அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. கடந்த மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில்  சென்செக்ஸ் 37,577 புள்ளிகளாக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது.

இதனால், ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது. மும்பை பங்குச்சந்தை  இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போது, 1,885 புள்ளிகள் சரிந்து முதலீட்டார்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Corona Virus Echo ,Indian Stock Markets Done ,Indian Stock Markets , Corona, Indian Stock Exchange, completed with decline
× RELATED இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி