×

சிலந்தி

நன்றி குங்குமம் முத்தாரம்

சிலந்திப் பேரினம் சிலந்திதேள் வகுப்பு அல்லது அராக்னிடா (Arachnida) என்பது முதுகெலும்பில்லா விலங்கு வகையில், காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்த, கணுக்கொடுக்கிகள் (Chelicerata) துணைத் தொகுதியில் உள்ள, இறக்கைகளும், உணர்விழைகளும் இல்லாத, ‘எண்கால் பூச்சி’கள் எனப்படும் உயிரினங்கள். காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் நிகழ்வு இவற்றின் மூச்சுக்குழல்கள் வழியாகவோ அல்லது மூச்சுப்பைகள் வழியாகவோ நடக்கும்.

சிலந்திதேள் வகுப்பில் பல்வேறு சிலந்திகளும், தேள்களும், உண்ணிகளும் (mites, ticks), பல்வேறு வகைப்பட்ட எண்காலிகளும் அடங்கும். அறிவியல் வகைப்பாட்டில் அராக்னிட் (arachnid) அல்லது அராக்னிடா (Arachnida) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்க மொழியில் அராக்னி  என்றால் சிலந்தி என்று பொருள். இதன் வழி பிரான்சிய மொழியில் arachnide என்றாகி, ஆங்கிலத்தில் அராக்னிடா (Arachnida) என்றும் அழைக்கப்படுகின்றது.

அராக்னிடுகள் அல்லது சிலந்திதேள் வகுப்பிகள் பெரும்பாலும் நிலத்தில் அல்லது தரைமீது வாழ்வன என்றாலும், பல வகைகள் நன்னீரிலும், கடல் நீர்லும் வாழ்கின்றன. சிலந்திதேள் வகுப்பு, மொத்தம் 100,000க்கும் மேலான இனங்கள்  கொண்டுள்ள பெரும் வகுப்பு.நாற்புள்ளி சிலந்தி ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்கின்றன. ஆண்சிலந்திகளைவிட பெண் சிலந்திகள் உருவில் பெரியன. பொதுவாக சிலந்திதேள் வகுப்பிலுள்ளவை நான்கு இணையான கால்கள் (எட்டு கால்கள்) கொண்டவை, இதனால் இவை ஆறுகால்கள் கொண்ட (மூன்று இணையான கால்கள் கொண்ட) பூச்சிகளில் இருந்து எளிதாக வேறுபடுத்தி அறியக்கூடியவை.

சிலந்திதேள் வகுப்பிகள் எட்டு கால்கள் கொண்டவை என்றாலும் அவை பொதுவாக 6 இணையான கை-கால் போன்று உடம்பில் இருந்து நீட்டிக்கொண்டிருக்கும் இணைப்புறுப்புகளாக மொத்தம் 12 கொண்டவை. இவற்றுள் 8 கால்கள் போக, மீதம் உள்ள 4 இணைப்புறுப்புகள் இரையைப் பற்றவும், தற்காப்புக்காகவும், சுற்றுச்சூழலை உணரவும் பயன்படுகிறது.

சிலந்திகளில் சில வகைகள்  நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல்  இவற்றுக்கு உணர்விழைகள் கிடையாது. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751  வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.  சிலந்திகள் 300 மில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.

தொகுப்பு:  ஆர்.சி.எஸ்


Tags : The spider class includes a variety of spiders, scorpions, ticks (mites, ticks), and a variety of numbers.
× RELATED பின்தங்கிய மாவட்டங்களில் மினி டைடல்...