×

வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500

நடுத்தர வகை எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் சிறந்த 7 சீட்டர் மாடலாக வாடிக்கையாளர் தேர்வில் முதன்மையாக உள்ளது மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார். இதன் மிரட்டலான தோற்றம், செயல்திறன் மிக்க இன்ஜின், அதிக வசதிகள் மற்றும் சரியான விலை போன்ற காரணங்களால், விற்பனைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருக்கிறது.இந்நிலையில், சந்தையில் புதிய மாடல்களின் வருகையால் இந்த காருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால், அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்புதிய மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த பன்ஸ்டெர் கான்செப்ட் அடிப்படையிலான பல டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் எதிர்பார்க்கலாம்.அதேபோன்று, சாங்யாங் கொரண்டு கார் தோற்றத்தின் பிரதிபலிப்பும் இப்புதிய காரில் இருக்கும் என யூகிக்கப்படுகிறது. இப்புதிய கார், மோனோகாக் சேஸீயில்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கும். இது, உலகளாவிய அளவில் விற்பனைக்கு செல்லும் என்பதால், அதற்கு தக்கவாறு, டிசைன் மற்றும் கட்டமைப்பு தரம் இருக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பெட்ரோல் மாடலில் இடம்பெற இருக்கும் மஹிந்திராவின் புதிய எம் ஸ்டாலியன் டர்போ இன்ஜின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லதாக இருக்கும். டீசல் மாடலில் வழங்கப்பட இருக்கும் 2.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 185 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். சில வேரியண்ட்டுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த கார், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். அதேநேரத்தில், விரைவில் வெளிவரும் டாடா கிராவிட்டாஸ், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய 7 சீட்டர் மாடல்களுக்கும் போட்டியாக இருக்கும்.

Tags : Comes , new Mahindra, XUV500
× RELATED சதம் அடிக்கும் வெயிலையும்...