×

வந்தாச்சு புதிய ஹீரோ பேஷன் புரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பேஷன் புரோ மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 அப்டேட்டாக ஏகப்பட்ட புதிய அப்டேட்களையும், திருத்தியமைக்கப்பட்ட டிசைன் பாகங்களையும் பெற்று வரும் இந்த பிஎஸ்6 ஹீரோ பேஷன் புரோ, டிரம் பிரேக் மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.இதில், டாப் வேரியண்டான, முன்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.67,190 விலையிலும், டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.64,990 விலையிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அப்டேட்டான ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லைட்டுடன் விற்பனை செய்யப்படும் இப்புதிய பிஎஸ்6 பைக்கின் பின்புறம், முந்தைய மாடலைவிட நேர்த்தியாக உள்ளது. ஹீரோ நிறுவனம், இப்புதிய பிஎஸ்6 பைக்கிற்கு கருப்பு, கிரே, மஞ்சள் மற்றும் சிவப்பு என அட்டகாசமான நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது. இந்த பிஎஸ்6 பைக்கில் மற்றொரு முக்கியமான அம்சமாக, புதிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இப்புதிய கிளஸ்ட்டர் மைலேஜ் மற்றும் ரியல்-டைம் எரிபொருள் திறன் உள்ளிட்ட ஏகப்பட்ட தகவல்களை வழங்கக்கூடியதாக உள்ளது. மேலும், ஹீரோ நிறுவனம் இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பையும் 15 மி.மீ. வரை அதிகரித்துள்ளது.

இதேபோல், பிஎஸ்6 அப்டேட்டாக இன்ஜின் அமைப்பில் வழக்கமாக உள்ள கார்புரேட்டர் சிஸ்டத்திற்கு பதிலாக புதிய எரிபொருள்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய ஹீரோ பேஷன் புரோ பைக்கைவிட இந்த பிஎஸ்6 பைக் 5 சதவீதம் கூடுதலான எரிபொருள் திறன் வழங்கும். இவை மட்டுமின்றி, நெரிசலான போக்குவரத்திலும் எளிமையான பயணத்திற்காக, ஆட்டோ சைல் செயல்பாடுகளுடன் இந்த பைக் சந்தைக்கு வரவுள்ளது. புதிய மாசு உமிழ்வு விதியினால் இதன் 110 சிசி இன்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.இந்த பிஎஸ்6 இன்ஜின் அதிக பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 9.79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. டிரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 110 சிசி பைக்குகளின் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வரும் பேஷன் புரோ, இப்பிரிவில் ஹீரோ நிறுவனத்தின் வெற்றிக்கரமான பைக் மாடல்களுள் ஒன்றாக விளங்குகிறது. பேஷன் புரோ மாடலின் இந்த பிஎஸ் 6 வெர்சன், இந்நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான பைக் மாடலாக உள்ள ஸ்பிளென்டருக்கு மேல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ₹64,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Vandachu New Hero Fashion Pro ,Vandachu ,Hero Fashion Pro , Vandachu, new ,Hero Fashion Pro
× RELATED உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்; அரசாணை வந்தாச்சு