×

அசத்தும் புதிய இன்னோவா லீடர்ஷிப் எடிசன்

இந்தியாவின் எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விளங்குகிறது. இந்நிலையில், கியா கார்னிவல், மாருதி எர்டிகா கார்களால் இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க டொயோட்டோ நிறுவனம் அடுத்தக்கட்ட நகர்வை துவக்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும், கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்திலும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட விசேஷ மாடலை டொயோட்டா கொண்டுவர இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விஎக்ஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு ‘’லீடர்ஷிப் எடிசன்’’ என்ற பெயரில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலானது இரட்டை வண்ணக் கலவையில் வர இருக்கிறது. கருப்பு வண்ணத்திலான கூரையுடன் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும். எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், இரட்டை வண்ணத்திலான அலாய் வீல், ரியர் ஸ்பாய்லர், சைடு ஸ்கர்ட், முன்புற பம்பருக்கான கூடுதல் லிப் ஆக்சஸெரீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லீடர்ஷிப் எடிசன் மாடலுக்குரிய விசேஷ பேட்ஜ் பட்டைகளும் காரின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.

உட்புறத்தில், முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு மிகவும் பிரிமீயமாக காட்சி தருகிறது. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோ போல்டிங் சைடு வியூ மிரர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர உள்ளது.இப்புதிய மாடலில், 7 ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெகிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார், எமர்ஜென்ஸி பிரேக் சிக்னல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இப்புதிய மாடலானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை வர உள்ளது. ரூ.50,000 முன்பணத்துடன் விரைவில் முன்பதிவு துவங்க உள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Tags : Innova Leadership Edison ,Astana , Astana , new Innova, Leadership Edison
× RELATED ஊழல் புகாருக்கு ஆளான ராகேஷ்...