×

மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் டி.ஏ. உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரச ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து, 21 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பணவீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படுவது வழக்கம். குறைந்தது ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அடிப்படை சம்பளம் மற்றும் கிரேடு சம்பளத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த அகவிலைப்படியாக நிர்ணயிக்கப்படுகிறது. 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 5 சதவீதம் உயர்த்தி 19 சதவீதமாக வழங்க கடந்தாண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போதைய பணவீக்கம் மற்றும் விலைவாசி நிலைக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை எவ்வளவு சதவீதம் உயர்த்தலாம் என்பது குறித்து மத்திய அமைச்சரவை குழு நேற்று ஆலோசனை நடத்தியது.

இதில் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து, 21 சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.  இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது குறித்து நேற்று பேட்டியளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘இந்த டி.ஏ உயர்வு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஒய்வூதியதாரர்கள் 65 லட்சம் பேரும் பயன் அடைவர். இந்த டி.ஏ உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ரூ.14,595 கோடி கூடுதல் செலவு ஏற்படும்,’’ என்றார்.


Tags : government ,DA ,Cabinet , Federal Government, Staff, DA Promotion, cabinet
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...